Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில் போலி நகை மூலம் ரூ. 1.82 லட்சம் மோசடி செய்த கில்லாடி பெண்.

0

'- Advertisement -

 

Ad banner

TVK ad

திருச்சியில் பிரபல நிதி நிறுவன நகை அடகு கடையில்
போலி நகையை வைத்து ரூபாய் 1.82 லட்சம் மோசடி. கில்லாடி
பெண் மீது வழக்குப்பதிவு

திருச்சி பொன்மலைப்பட்டி கிளையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவன நகை அடகு கடையில் திருவெறும்பூர் தெற்கு காட்டூர்ரை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி தாமஸ் என்பவர் தனது நகை 51.1 கிராம் நகையை அடமானம் வைத்து ரூபாய் ஒரு லட்சத்து 82 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.

பிறகு அந்த அடகு கடையின் மேலாளர் ரமேஷ் என்பவர் அந்த நகையை நகை மதிப்பீட்டாளிடம் கொடுத்து சோதனை செய்தார்.
அப்போது அந்த நகை போலி என தெரிய வந்தது. இது குறித்து ரமேஷ் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி நகையை அடமானம் வைத்து ஏமாற்றி பணத்தை பெற்ற ஸ்டெல்லா மேரி தாமஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.