Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அதிமுக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.24ம் தேதி திமுக அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க தீர்மானம் .

0

 

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது .

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது .
அமைப்புச்செயலாளர் ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் ஜோதிவாணன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி பரமசிவம்,மாவட்ட இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், அணி நிர்வாகிகள் பாலாஜி, ஞானசேகர், கலிலுல் ரகுமான், ஜோசப் ஜெரால்டு, வக்கீல் ராஜேந்திரன்,வெங்கட் பிரபு,ஜான் எட்வர்ட்,சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, ரோஜர், ராஜேந்திரன், ஏர்போர்ட் விஜி , எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நாகநாதர் பாண்டி,கலைவாணன்.பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் வக்கீல் முத்துமாரி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முல்லை சுரேஷ்,நிர்வாகிகள் வழக்கறிஞர் சேது மாதவன், பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், இன்ஜினியர் ரமேஷ், கொட்டப்பட்டு எம்.பி.வி.ஆனந்த், நாட்ஸ் சொக்கலிங்கம்,மகளிர் அணி நிர்வாகிகள் ஆரோக்கிய மேரி, புவனேஸ்வரி, சபீனா பேகம் வட்ட செயலாளர் கே.சி.பி ஆனந்த், ஐடி பிரிவு நிர்வாகிகள் கதிரவன், நாகராஜன்,புத்தூர் ரமேஷ், சக்தி, பிரத்தி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவுச்சாராயம் குடித்து 52க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தை கண்டித்தும்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் 24-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திரளானோர் பங்கேற்பது என ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.