திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தார்

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயற்குழு கூட்டத்தில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் வசதிக்காக தார் சாலை வசதி செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் பி. வி. வெங்கட் திருச்சி போர்ட் போலியோ வும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான எம். எஸ். ரமேஷ் அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.