Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்ஸ்டாகிராமில் நெருங்கி பழகியதால் வந்த வினை. 13.5 பவுன் தாலியை இழந்த குடும்பத் தலைவி.

0

 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவரின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணுக்கு சிவசுப்பிரமணியம் என்பவருடன் சமூக வலைத்தளம் ( இன்ஸ்டாகிராம் ) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்மூலம் இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் நட்பாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தை காரணமாக வைத்து சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சிவசுப்பிரமணியம் வந்துள்ளார். அப்போது சிவசுப்பிரமணியம், அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்தாராம். இதை குடித்த சிறிது நேரத்தில் அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து சிவசுப்பிரமணியம், பெண்ணின் கழுத்தில் கிடந்த 13.5 பவுன் தங்க தாலி சங்கிலியை திருடி விட்டு தப்பிச் சென்றார். மயக்கம் தெளிந்ததும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் சிவசுப்பிரமணியம் தான், நகைகளை பறித்துச் சென்றது உறுதியானது. ஆனால், சிவசுப்பிரமணியத்திடம் கேட்ட போது அவர் நகையை எடுக்கவில்லை எனக் கூறிவிட்டார் .

எனவே, பாதிக்கப்பட்ட பெண் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற சிவசுப்பிரமணியத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.