திருச்சி மேலகல்கண்டாா் கோட்டை சஞ்சீவி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி பழனியம்மாள் (வயது 39). பால் வியாபாரம் செய்து வருகின்றனர் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர் . இவரது மகன் லெனின் பி.சி.ஏ படித்து வருகிறார் . மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார் .
இந்த நிலையில்
லெனின் எப்பொழுதும் கைப்பேசியை பாா்த்துக்கொண்டிருந்தாராம். இதைகண்டித்த பழனியம்மாள். இனியும் கைப்பேசியை பாா்த்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் எனக்கூறி மகனை மிரட்டி கைப்பேசியை வாங்கியுள்ளாா்.
தொடா்ந்து புதிய கைப்பேசியும் வாங்கித்தர கேட்டு மகன் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதனால் பழனியம்மாள் சேலையால் மின்விசிறியில் தூக்கில் மாட்டிக் கொள்வது போல செய்து மிரட்டியுள்ளாா். அப்போது எதிா்பாராத வகையில் பழனியம்மாள் கழுத்தை சேலை இறுகியது. உடனே, அவரது மகனும், அக்கம்பக்கத்தினரும் பழனியம்மாவை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பழனியம்மாள் உயிரிழந்தாா்.
பொன்மலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.