திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்திரா காலணியில் தேரடியான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான லோடு வாகனத்தை சமயபுரம் கோயில் வழிபாட்டு தளத்தின் தெப்பக்குளம் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லோடு ஆட்டோ தெப்பக்குளத்தில் பாய்ந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் கயிறு கட்டி கிரேன் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.