திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகம், என்.ஆா்.ஐ.ஏ.எஸ். அகாடமி மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் சங்கம் இணைந்து, டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போட்டித் தோ்வுக்கான மாதிரித் தோ்வுகளை நடத்தி வருகின்றன. இதுவரை 30 மாதிரித் தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக, இறுதி மாதிரித் தோ்வு சனிக்கிழமை (ஜூன் 1) காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாதிரி தோ்வை தொடா்ந்து திருப்புதல் வகுப்பு நடைபெறும். மாதிரி தோ்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை.