Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டிய நபர்களை மடக்கிப் பிடித்த எஸ் ஐ சந்தானம் .

0

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதியவர், 2 சப் இன்ஸ்பெக்டர்களை சரமாரியாக வெட்டிய 2 வாலிபர்.

 

திருச்சி, திருவானைக்காவல் ஐந்தாம் பிரகாரத்தை சேர்ந்தவர் காஜா மைதீன் (வயது 63). சமையல் தொழிலாளியான இவர், நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வந்து, மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அவர் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகே வந்தபோது, அங்கு வந்த 4 பேர் காஜா மைதீனிடம் இருந்த பையையும், ரூ.1,400-ஐயும் பறித்து சென்றனர். இதையடுத்து காஜா மைதீன் 2 பேரை பிடித்து சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றுள்ளார். அப்போது அவரை, அபிஷேக் என்ற வாலிபர் தடுத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்கச்சென்ற போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் ராஜா, பிரேம் ஆனந்த் ஆகியோரையும் அபிஷேக் அரிவாளால் தாக்கியதில், அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சாலையில் சென்றவர்களையும் அபிஷேக் அரிவாளால் தாக்கியுள்ளார். இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, அபிஷேக்கிடம் இருந்து அரிவாளை பறித்தார். அப்போது அங்கு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம், அபிஷேக்கை மடக்கி பிடித்தார். இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் அபிஷேக்கை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதையடுத்து பலத்த காயமடைந்த காஜா மைதீன் 108 ஆம்புலன்ஸ் மூலமும், அபிஷேக் மற்றொரு ஆம்புலன்சிலும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அபிஷேக்குடன் வந்தவர்கள் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குரு (வயது20), காந்திமார்க்கெட் தவ்பிக் (வயது19), அரியமங்கலத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது19) என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அதில் 2 பேரை போலீசார் பிடித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.