Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்.

0

 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில்
1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்.
3 பேர் மீது வழக்கு

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இதை அடுத்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது உய்யக்கொண்டான்மலை ரோடு சண்முகா நகர் மேற்கு விஸ்தரிப்பு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதிக்க வைத்து விற்பனை செய்ததாக செல்வேந்திரன் மற்றும் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 47 ஆயிரத்து 670 மதிப்பிலான 234 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தேவதானம் ஜங்ஷன் பகுதி மற்றும் ஏர்போர்ட் ஸ்டார் நகர் ஜங்ஷன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதிகளில் கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த கவியரசன் (வயது 25) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி பிள்ளையார் தெருவை சேர்ந்த ரேமண்ட் (வயது 54) ஆகியோர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது இதனை அடுத்து மதுவிலக்கு அமலாக்க போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் 67 ஆயிரத்து 760 மதிப்பிலான 484 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.