Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

முக்தி பெறுவதற்கான எளிய வழி . மனுஜோதி ஆசிரமம் நிர்வாகி லியோ பால் லாறி

0

'- Advertisement -

 

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகில் அமைந்துள்ளது மனுஜோதி ஆசிரமம். பகவான் ஸ்ரீ லஹரி கிருஷ்ணா அவர்களால் 1963 ல் தொடங்கப்பட்டது.

இதன் கிளைகள் இந்தியாவின் பல மாநிலத்திலுள்ள பல்வேறு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.

திருச்சியில், மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் லாறி ஆன்மீக விழிப்புணர்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

இக்கூட்டத்தில் சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

லியோ பால் லாறி அவர்கள் பேசும்போது இன்றைய அவசரமான உலகில் இறைவனை மறவாமல் இருப்பதற்கு ஆன்மீக எழுச்சியினை ஏற்படுத்தி வருகிறோம். மனிதகுலம் இறைவழியிலே விருத்திபெற்று வாழ்ந்து, நல்வழியிலே நடந்து, இறைவனால் அருளப்பட்ட அநேக வேதங்கள் மற்றும் புராணங்களைப் படித்து உணர்ந்து, தன்னுடைய முழு மனதோடும் சிந்தையோடும் அதற்கேற்றபடி நடந்தால், அதுவே இறைவனைப் பற்றிக் கொண்டு ஜீவன் முக்தியை பெறுவதற்கான எளிய வழியாகும்.

இந்த உலகத்திலே அதிபயங்கரமான அழிவுகள் சம்பவிக்கப்போகிறது. அதிலிருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி, இந்த கடைசி காலத்திலே அவதரித்த ஸ்ரீமந் நாராயணர் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவிடம் சரணடைய வேண்டும். ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற கொள்கையை நம்பும் பக்தர்களை எங்கள் மனுஜோதி ஆசிரமம் எப்பொழுதும் வரவேற்கிறது, என கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.