திருச்சியில் குடி பழக்கத்திற்கு ஆளான நபர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருச்சி இபி ரோடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40 )இவர் திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார்.
இந்நிலையில் சம்பதவன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகம் அறையில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்ய தொங்கி உள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் சண்முகத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.