Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் . வீரப்பன் மகள் களம் இறங்குகிறார். பாமக,பாஜக அதிர்ச்சி.

0

 

மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் ஒரே மேடையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த தேர்தலில் வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

சீமான் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழுவிபரம் வெளியாகி உள்ளது. இதில் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விவரம்:

1. திருவள்ளூர் – மு.ஜெகதீஷ் சந்தர்,

2. வடசென்னை – டாக்டர் அமுதினி

3. தென் சென்னை – முனைவர் சு.தமிழ்ச்செல்வி

4. மத்திய சென்னை – முனைவர் இரா.கார்த்திகேயன்

5. திருப்பெரும்புதூர் – டாக்டர் வெ.ரவிச்சந்திரன்

6. காஞ்சிபுரம் (தனி) – வி.சந்தோஷ்குமார்

7. அரக்கோணம் – பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

8. வேலூர் – தி.மகேஷ் ஆனந்த்

9. தருமபுரி – டாக்டர் கா.அபிநயா

10. திருவண்ணாமலை – டாக்டர் ரா.ரமேஷ்பாபு

11. ஆரணி – டாக்டர் கு.பாக்கியலட்சுமி

12. விழுப்புரம் – இயக்குநர் மு.களஞ்சியம்

13. கள்ளக்குறிச்சி – இயக்குநர் ஆ. ஜெகதீசன்

14. சேலம் – டாக்டர் க. மனோஜ்குமார்

15. நாமக்கல் – க.கனிமொழி

16. ஈரோடு – டாக்டர் மு.கார்மேகன்

17. திருப்பூர் – மா.கி. சீதாலட்சுமி

18. நீலகிரி(தனி) – ஆ.ஜெயகுமார்

19. கோயம்புத்தூர் – ம. கலாமணி ஜெகநாதன்

20.பொள்ளாச்சி – டாக்டர் நா.சுரேஷ் குமார்

21. திண்டுக்கல் – டாக்டர் கைலைராஜன் துரைராஜன்

22. கரூர் – டாக்டர்ரெ.கருப்பையா

23. திருச்சி – ஜல்லிக்கட்டு ராஜேஷ்

24. பெரம்பலூர் – இரா. தேன்மொழி

25. கடலூர் – வே.மணிவாசகன்

26. சிதம்பரம் – ரா. ஜான்சி ராணி

27. மயிலாடுதுறை – பி.காளியம்மாள்

28. நாகப்பட்டினம் – மு.கார்த்திகா

29. தஞ்சாவூர் – ஹூமாயூன் கபீர்

30. சிவகங்கை – வி.எழிலரசி

31. மதுரை – முனைவர் மோ.சத்யாதேவி

32. தேனி – டாக்டர் மதன் ஜெயபால்

33. விருதுநகர் – டாக்டர் சி.கௌசிக்

34. ராமநாதபுரம் – டாக்டர் சந்திர பிரபா ஜெயபால்

35. தூத்துக்குடி – டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

36. தென்காசி – சி.ச. இசை மதிவாணன்

37. திருநெல்வேலி – பா.சத்யா

38. கன்னியாகுமரி – மரிய ஜெனிபர்

39. கிருஷ்ணகிரி – வித்யா வீரப்பன்

40. புதுச்சேரி – டாக்டர் ரா.மேனகா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

இந்த தேர்தலில் திடீர் திருப்பமாக வீரப்பன் மகள் வித்யா கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்த செய்தி பாமக மற்றும் பாஜகவுக்கும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் அவர் முன்னதாக பாஜகவில் இணைந்திருந்தார்.

நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் இப்போது வரைநேற்று உறுதியாகவில்லை. எனவே கூட்டத்தில் பேசிய சீமான், ” என் மக்களும், சொந்தங்களும் சின்னத்தை தேட மாட்டார்கள் என்னைத்தான் தேடுவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.