Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே மூன்று டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது .

0

'- Advertisement -

Ad banner

சமயபுரம் அருகே
லாரியில் கடத்தப்பட்ட மூன்று டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

திருச்சி சமயபுரம் போலீசார் வாளாடி சிவன் கோவில் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீசார் அந்த லாரியை ஓட்டி வந்த மனச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. வேலு மற்றும் அர்ஜுனன் ஆகிய மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பின் லாரியில் கடத்தப்பட்ட 95 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கைப்பற்றப்பட்ட அரிசி 3 கால் டன் ஆகும். பல்வேறு இடங்களில் இருந்து இந்த ரேஷன் அரிசியை பதுக்கி கடத்தியது தெரிவித்துள்ளது.
இதில் தொடர்புடையவர்களை புலனாய்வு குழு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.