Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சலூன் கடைக்காரர்களிடம் பணம் பறித்த பிரபல ரவுடி கைது

0

'- Advertisement -

திருச்சி சலூன்கடைக்காரரிடம் கத்தி பணம் பறித
பிரபல ரவுடி கைது

 

Ad banner
TVK ad

திருச்சி பொன்மலைப்பட்டி ககம்பர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 51). இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தற்று இவரது கடைக்கு சென்ற வாலிபர் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பணத்தை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து பாபு பொன்மலை போலீசில் புகார் செய்தார். புகாரின் ப பேரில் போலீசார் வழக்கு பதிந்து, அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த ரெனிஸ் என்கிற ரெண்டா ரெனிஸ் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பணம், இருசக்கர வாகனம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்த திருப்பதி என்பவர் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தபோது அவரிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்ததாக பாலக்கரையைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற ரவுடியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.