Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் சாலை ஓரப் பூங்கா.ரூ100 லட்சம் திட்டம். ரூ.10 லட்சத்தில் பணி. மேயருக்கு ரூ.90 லட்சமா?

0

 

திருச்சி லாசன்ஸ் ரோட்டில் ( ஐயப்பன் கோயில் சாலை ) கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு சாலையோர பூங்கா ஒன்றினை திறந்து வைத்தார். இதன் திட்ட மதிப்பு ரூ.100 லட்சம்.

ஏற்கனவே சிமெண்ட் கற்கள் அமைக்கப்பட்டு இருந்ததை அகற்றிவிட்டு சிமெண்ட் தளம், பொதுமக்கள் உட்காருவதற்கு ஆங்காங்கே சில கிரானைட் கற்கள் மற்றும் எல்இடி மின் கம்பங்கள் பெரிது சிறிது என 60 கம்பங்கள். இந்தப் பணிக்கு ரூபாய் 100 லட்சமாம்.

2,400 சதுர அடி ரூ. 24 லட்சத்திற்கு இடம் வாங்கி பில்லர் அமைத்து வீடு கட்டினால் கூட இவ்வளவு செலவு வராது.

இது குறித்து கவுன்சிலர் புஷ்பராஜ் மற்றும் மண்டலத் தலைவர் துர்கா தேவி ஆகியோரிடம் கேட்டபோது எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.10 பைசா காசு வாங்கவில்லை என கூறிவிட்டனர் .
அதிகாரிகளும் மனுப்பளாகவே பதில் கூறினார் .

இந்த பூங்காவுக்கு பின்னால் ஓடும் சாக்கடையினால் 5 நிமிடம் கூட பொதுமக்களால் பொழுதை போக்க முடியாது , அவ்வளவு துர்நாற்றம் வீசுகின்றது .

இந்த சாலையோர பூங்காவினை கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் செலவாகி இருக்கும் மீதி ரூபாய் 90 லட்சம் மேயருக்கு சென்றதா ? இந்த ஒரே பணியில் மேயருக்கு ரூ.90 லட்சம் என்றால் இந்த பூங்கா திறப்பு விழா அன்று மொத்தம் ரூபாய் 28 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை அமைச்சர் கே.என் நேரு திறந்து வைத்தார்.

இதில் அனைத்திலும் கமிஷன் என்றால்…
தலை சுற்றுகிறது.
இதுஅனைத்தும் மக்களின் வரிப்பணம் . மக்களின் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ? என்று புலம்பியவாறு சென்றார் அந்த சமூக ஆர்வலர் .

சாலையோரம் பூங்காவிற்கு மட்டும் ரூ.100 லட்சம். பின்னாடி இருந்த சாக்கடையை சரி செய்வதற்கு ரூ.50 லட்சம் செலவு தனி என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.