Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கள்ளக் காதலியின் கணவனை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் கள்ள காதலியின் கணவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிவு.

TVK ad

திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 40). லோடுமேன்.
இவரது மனைவிக்கும் உக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சூர்யா என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணக்குமாரின் மனைவி திடீரென மாயமானார்.
பின்னர் அவரது மனைவியை போலீசார் மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சரவணகுமார் திருச்சி மெயின் ரோடு ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகாமையில் நின்றுகொண்டிருந்தபோது அங்கு ஆட்டோவில் வந்த சூர்யா அவரை தாக்கி விட்டு தப்பி சென்றார் .இதில் சரவணகுமாருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் .அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.