Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவரின் பிணம் . போலீசார் விசாரணை

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் .

சென்னை மேற்கு மாம்பழம் பிருந்தாவனம் குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (வயது 75).

TVK ad

திருமணம் ஆகாதவர்.
இவர் திருச்சி- மதுரை ரோடு ஜான் பஜார் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒரு அறையில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக அவரது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜன்னலை திறந்து பார்த்தபோது அங்கிருந்து துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இத்தகவலை கோட்டை போலீசாருக்கு தெரிவித்தனர் .

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சேதுராமன் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.