Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உரிமை மீட்பு போராட்டம் நடத்த ஓபிஸ்க்கு என்ன உரிமை உள்ளது? திருச்சியில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

0

 

உரிமை மீட்பு போராட்டம் நடத்த ஓ.பி.எஸ்.க்கு என்ன உரிமை இருக்கிறது

திருச்சி அதிமுக பொதுக்கூட்டத்தில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்டம் உறையூர் பகுதி அதிமுக சார்பில் பகுதி செயலாளர் பூபதி என்கிற பூபேந்திரன் தலைமையில் நடந்தது.

பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் வரவேற்றனர்.

கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்.
அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன், இளைஞர் அணி முத்துக்குமார், மாணவரணி என்ஜினியர் இப்ராம்ஷா, சிறுபான்மை பிரிவு மீரான், இலக்கிய அணி பாலாஜி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி ஞானசேகர், ஐ.டி.பிரிவு வெங்கட் பிரபு, மாணவணி மாவட்ட துணைத் தலைவர் சேது மாதவன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, ரோஜர், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், நிர்வாகிகள் பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேன், வரகனேரி ராஜேந்திரன்,
டிபன் கடை கார்த்திகேயன், ஜெயக்குமார், கல்லுக்குழி முருகன், பாருக்அலி,
எனர்ஜி அப்துல் ரகுமான், டி.ஆர்.சுரேஷ் குமார்,
வக்கீல்கள் முல்லை சுரேஷ், மற்றும் வட்டச் செயலாளர்கள் வினோத்குமார். கார்த்திகேயன், இசைமணி பேக்கரி முருகன், உறந்தை முத்தையா, உறந்தை ரவி, வசந்தம் செல்வமணி மற்றும் என்ஜினீயர் ராஜா, ராஜாளி சேகர், உடையான் பட்டி செல்வம், குருமூர்த்தி ஒத்தக்கடை , மணிகண்டன்,
ரஜினிகாந்த், எடத்தெரு பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

உரிமை மீட்பு போராட்டம் என ஓ.பி.எஸ் தனது சகாக்கள் 4 பேருடன் ஊர் ஊராக செல்கிறார். என்ன உரிமை இருக்கிறது ?
ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை பொதுக்குழுவில் நீக்கி விட்டாகிவிட்டது.
அனைத்து நீதிமன்றங்களும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்பதை உறுதி செய்துள்ளது.
மோடிதான் நாட்டின் பிரதமர். ஆகவே யாராவது கூட்டணிக்கு வாங்க என ஓபிஎஸ் சொல்கிறார்.
நரேந்திரமோடிதான் இந்நாட்டின் பிரதமர் என நாங்களும் சொல்லி கொண்டு இருந்தோம். ஆனால், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என பாஜகவினர் பேசியது சரியல்ல.
எங்களை மிரட்ட அண்ணாமலையை வைத்து பேச வைத்ததால், அமித்ஷா, மோடியிடம் ஆணித்தரமாக சொல்லிவிட்டு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியவர் எடப்பாடி பழனிச்சாமி.
ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா ஆகியோர் மண்குதிரை போன்றவர்கள. அவர்களை ஆதரிக்கும் நண்பர்கள் இனியும் அவர்களை நம்பாதீர்கள் .
தமிழகத்தில் தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது .சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கிறது.அமைதியான, சமூகமான நல்லாட்சி நடைபெற, ஜெயலலிதாவின் திட்டங்கள் தொடர மீண்டும் எடப்பாடி யார் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும். அதற்கு தமிழக மக்களாகிய நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
முடிவில் பகுதி அவைத்தலைவர் எம்.ஜே.பி.
வெஸ்லி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.