Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எரிசாராய ஆலையில் கழிவு கந்தகம் தீ பற்றி விபத்து . தீயணைப்புத் துறையினர் விரைந்து அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு.

0

 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செந்தண்ணீா்புரம் அருகே எரி சாராயம் உற்பத்தி செய்யும் ஆலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் எரிசாராய உற்பத்தியின்போது கழிவுகளாக வெளியேறிய மஞ்சள் நிற திடவவடிவிலான கந்தகம் கிடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் ஆலை வளாகத்தில் உள்ள செடி கொடிகளில் பற்றிய தீ தேங்கிக்கிடந்த கந்தகத்திலும் பற்றியுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டத்தால் சூழப்பட்டது. தகவலறிந்த திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலை அலுவலா் சத்தியவா்த்தன் தலைமையிலான குழுவினா் விரைந்து சென்றுதீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் சத்தியவா்த்தன் கூறுகையில்:-

எரி சாராயம் தயாரிக்கும் போது கழிவுகளாக வெளியேறும் மஞ்சள் நிற திட கந்தகம் 63 டன் அளவுக்கு இங்கு அகற்றப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. ஆலையை முடியவுடன் இதை முறையாக அழித்திருக்க வேண்டும். தீயணைப்புவீரா்களுக்கு பணியின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடன் அங்கிருந்து வெளியேறி, பின்னா் ஆக்சிஜன் சிலண்டா்களை அணிந்து கொண்டு உள்ளே சென்று போராடி தீயை அணைத்தனா்.

காலதாமதம் ஏற்பட்டிருந்தால் 63 டன் கந்தகத்திலும் தீ பரவி, பெரிய புகை மண்டலம் ஏற்பட்டு அப்பகுதியினருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டிருக்கும். இவற்றை பாதுகாப்பாக அழிக்க வேண்டும் என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.