Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் எழுத்தாளர் கனல் மைந்தனின் கவிதை தொகுப்புகள் ஆகிய 3 நூல்கள் வெளியிட்டு விழா

0

'- Advertisement -

 

Ad banner

எழுத்தாளர் கனல் மைந்தனின் ஊரு தாண்டியவன் நாவல் மற்றும் புலியாட்டம், வனத்தின் சுவடுகள் கவிதை தொகுப்புகள் ஆகிய 3 நூல்கள் வெளியீட்டு விழா.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திருச்சியில் வியாழன் அன்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவ. வெங்கடேஷ் தலைமை வகித்தார்.

கவிஞர் பூவிழி தென்றல் வரவேற்றார்.
விழாவில் எழுத்தாளர் கனல் மைந்தன் நூல்களை வெளியிட அதனை கவிஞர் மாரியம்மாள், எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ், மாதர் சங்க மாநகர செயலாளர் சரஸ்வதி மற்றும் கோவிந்தன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மாநில துணைத்தலைவர் நந்தலாலா வாழ்த்துரை வழங்கினார்.ஊருதாண்டியவன் நாவலை அறிமுகம் செய்து மாநகர செயலாளர் இளங்குமரன் பேசினார். புலியாட்டம், வனத்தின் சுவடுகள் கவிதை தொகுப்புகளை அறிமுகம் செய்து முனைவர் பாலின்,மாவட்ட பொருளாளர் ஹரிபாஸ்கர் ஆகியோர் பேசினர் .

விழாவில் கவிஞர்கள் சுரபி ராமச்சந்திரன், சையத் இப்ராஹிம், நாடக நடிகர் சுமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கிருஷ்ணமூர்த்தி, காந்தி, லெனின் ஆகியோர் பாடல்கள் பாடினர்.

முடிவில் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் நன்றி கூறினார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.