மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் திருச்சி அதிமுக மாணவரணி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு .
திருச்சி தென்னூரில் உள்ள
மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மாணவரணி மரியாதை.
மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் பங்கேற்பு.
திருச்சியில் அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர்கள் தலைமையில், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள்எம்பிக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் அமைதி ஊர்வலம் சென்று,நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.
தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் உள்ளன.
இந்த நினைவிடங்களில் அதிமுகவினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் அறிவழகன், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் அழகர்சாமி ஆகியோர் தலைமையில்,
திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் இருந்து அமைதி ஊர்வலம் ஆனது புறப்பட்டது.
இந்த அமைதி ஊர்வலம் உழவர் சந்தை வழியாக தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்பி குமார், வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல் மனோகரன், வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள் சிவபதி,
பூனாட்சி, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் ஜோதிவாணன்,மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா, பத்மநாதன்
,ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் கார்த்திகேயன், இளைஞர் அணி சிந்தை முத்துக்குமார்,
சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான்,இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ஜெயம் ஸ்ரீதர்,கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன்,பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா, பூபதி, கலைவாணன், ரோஜர், ராஜேந்திரன்,ஏர்போர்ட் விஜி,இளைஞர் அணி புத்தூர் சதீஷ்குமார்,சிறுபான்மை பிரிவு மீரான் சகாபுதீன்,இன்ஜினியர் ராஜா, இன்ஜினியர் ரமேஷ் பாலாஜி, நாட்ஸ், சொக்கலிங்கம்,பாலக்கரை சக்திவேல் கருமண்டபம் சுரேந்தர், விவசாய அணி பாலசுப்பிரமணியன், கார்த்திகேயன், வக்கீல் சேது மாதவன்,முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர்,
வக்கீல்கள் முல்லை சுரேஷ், முத்துமாரி, சசிகுமார், ஜெயராமன்,
பொதுக்குழு வெல்லமண்டி பெருமாள், எனர்ஜி அப்துல் ரகுமான்,இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ் குமார்,ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன் ஜெயக்குமார், கோப்பு நடராஜ், ராவணன்,மற்றும் எஸ்பி பாண்டியன், பாலக்கியா மண்டே சுரேஷ் பாலக்கரை ரவீந்திரன் அப்பா குட்டி உடையாம்பட்டி செல்வம், கே.டி. அன்புரோஸ்,கே.டி ஆனந்தராஜ்,கயிலை கோபி,வண்ணார்பேட்டை ராஜன், கிருஷ்ணமூர்த்தி, எம்.கே.குமார், தர்கா காஜா,கல்லுக்குழி முருகன் ,ஏழுமலை, டைமன்ட் தாமோதரன், பாலக்கரைசகர், பொன் அகிலாண்டம், ஐ.டி.பிரிவு நாகராஜ், இளைஞரணி செயலாளர்கள், மாணவர் அணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.