Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள்: திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட
அதிமுக சார்பில்
எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.

TVK ad

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக,
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி பெல் நிறுவன நுழைவு வாயிலில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில், அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், கலை பிரிவு செயலாளர் ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி, வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், நகர செயலாளர் எஸ்.பி. பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.