Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் .

0

 

குழந்தைகளை ஒப்படைக்கச் செல்லும்போது
பாதுகாப்பு. வாகனங்கள் செல்ல முடிவு

தத்து எடுக்கப்பட்ட வெளிமாநில குழந்தைகளை ஒப்படைக்கச் செல்லும் போது காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு
மற்றும் ஒருங்கிணைந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாவட்ட முதன்மை நீதிபதி மு.பாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.

இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக புதுக்கோட்டை சாலையில் ஆவூர் பிரிவு சாலையருகே அமைந்துளஅள அன்னை சத்யா அம்மையார் அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து மாத்தூர் அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளிக்கு குழந்தைகள் சென்று வர போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தருவது, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் புஞ்சை சங்கேந்தி ஊராட்சியில் அமைந்துள்ள குழந்தைகள் புதாகாப்பு மைய கட்டிடத்துக்கு சுற்றுச்சுவர் அல்லது கம்பி வேவி அமைப்பது, மீட்கப்படுகின்ற குழந்தைகள் குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலையில் காப்பகங்களில் வைத்து பாதுகாக்கப்படுகின்றனர். இதில், வெளி மாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களது பெற்றோர் வர இயலாத நிலையில், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அவ்வாறு அனுப்பி வைக்கும்போது, குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையிலும் அவர்களை அழைத்து செல்லும் வாகனத்துடன், காவல்துறையினரின் பாதுகாப்பு (எஸ்கார்ட்) வாகனங்கள் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இளைஞர் நீதிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து நடைபெற்று வருகின்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடத்தவும், குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் பெறுவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், சிறப்புமுகாம்கள் மூலம் சான்றிதழ்கள் பெறுவது என்பன உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் நீதித்துறை நடுவர்-6 சிவக்குமார், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்.
ப.ராகுல்காந்தி, சமூக நலத்துறைனர், குழந்தை பாதுகாப்பு துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.