திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பாக தேசிய அளவிலான கருத்தரங்கம் .
திருச்சி, கி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், நுண்ணுயிரியியல் துறை சார்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான Antimicrobial Stewardship தொடர்பான தேசிய அளவிலான மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த மருத்துவக் கருத்தரங்கிற்கு திருச்சி, கி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மரு. நேரு, தலைமை ஏற்று குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
நுண்ணுயிரியியல் துறைத் தலைவர் பேராசிரியர் மரு. ஞானகுரு வரவேற்புரை அளித்து மருத்துவக் கருத்தரங்கிற்கு வருகை புரிந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர், துணை மருத்துவக் கண்காணிப்பாளர், துணை முதல்வர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
இக்கருத்தரங்கில் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மரு. அருண் ராஜ், துணை முதல்வர் மரு. அர்ஷியா பேகம், 250 மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் மருத்துவர்கள் மங்கையர்கரசி , உமா சேகர் , சஞ்சய் பட்டாச்சாரியார, சூர்யா குமார் , செந்தில்குமார், எழில்நிலவன் முருகேசன் ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்து கொண்டு மருத்துவர்களுக்கும் முதல் நிலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் விரிவுரை ஆற்றினர்