Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எம்ஜிஆரின் 36-வது நினைவு நாள்: எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம், நலத்திட்டங்கள் வழங்கினார் மாவட்ட செயலாளர் குமார்

0

'- Advertisement -

 

Ad banner

திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன நுழைவு வாயிலில் எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியாதை.

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக நிறுவனமான எம் ஜி ஆரின் 36 ஆவது நினைவு நாள் இன்று அதிமுக கட்சியினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

TVK ad

இதனை அடுத்து
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவன நுழைவு வாயிலில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ‘ அவைத்தலைவர் அருணகிரி , மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஏ டி பி கார்த்திக், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ராஜா மணிகண்டன்,கலை பிரிவு செயலாளர். ராஜா, துணைச் செயலாளர் சுபத்ரா தேவி சுப்ரமணி,வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ் கே டி கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர். எஸ் எஸ் ராவணன், பகுதி செயலாளர் பாலசுப்பிரமணியன் . துவாக்குடி நகரச் செயலாளர் எஸ் பி பாண்டியன், நகர அவைத் தலைவர் சுரேஷ், தொழில்நுட்ப பிரிவு தலைவர் மலைச்சாமி, கூத்தப்பார் பேரூர் கழகச் செயலாளர் முத்துக்குமார், வக்கீல் சாருமதி, நவல்பட்டு பாலமூர்த்தி, துவாக்குடி கணபதி, காட்டூர் அம்மன் மணி, ஒன்றிய கவுன்சிலர் பொய்கைகுடி முருகா மாவட்ட கவுன்சிலர் சவரி அம்மாள் செல்வராஜ்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.