Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தூத்துக்குடிக்கு திருச்சியில் இருந்து 2ம் கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது .

0

'- Advertisement -

Ad banner

தூத்துக்குடிக்கு திருச்சி மாவட்டத்திலிருந்து முதல்கட்டமாக ரூ.7.67 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

TVK ad

இரண்டாவது கட்டமாக ரூ.5.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

இதில், பிரட், பிஸ்கெட், பால் பவுடா், தண்ணீா் பாட்டில்கள், ரொட்டிகள், நாப்கின், மெழுகுவா்த்தி, தீப்பெட்டி, கொசுவா்த்தி, படுக்கை விரிப்புகள், தலையணை, துண்டு, கோரைப் பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் லாரி மூலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், ஆட்சியரின் நோமுக உதவியாளா் (பொது) சரண்யா, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கங்காதாரணி உள்ளிட்டோா் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தனா்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.