Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் லேசர் நீர்தரை ஒலி ஒளி ஒலி காட்சி உள்ளிட்ட ரூ.61.95 கோடி மதிப்புள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு .

0

 

திருச்சி மாநகராட்சியில் ரூ. 61.95 கோடியில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் லேசா் நீா்த்திரை ஒலி, ஒளி காட்சி, புதிய கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.இதுகுறித்து மேயா் மு. அன்பழகன் மேலும் தெரிவித்தது:

திருச்சி மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் முடிவுற்ற சில திட்டப்பணிகளை ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே. என். நேரு அா்ப்பணித்து, மேலும் சில திட்டங்களைத் தொடங்கியும் வைத்தாா்.

அதன்படி, திருச்சி மேற்குப் தொகுதியில், பொது நிதியின் கீழ் உடற்பயிற்சி கூடம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டடங்கள், சமுதாயக்கூடம் என ரூ. 1.11 கோடியில் 4 பணிகளும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 1.73 லட்சத்தில் சமுதாயக் கூடங்கள், ரேசன் கடைகள், பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட ரூ. 3.15 கோடியில் 11 திட்டப் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

அதேபோல திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சீா்மிகு திட்டத்தின் கீழ் ரூ. 61.95 கோடியில் முடிந்த திட்டப்பணிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

திருச்சி கோட்டை மேலரண்சாலையில் காளியம்மன் கோயில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள பன்மாடி வாகன நிறுத்தம், பட்டா்வொத் சாலை பகுதியில் அமைக்கப்பட்ட புராதன பூங்கா, கீழரண் சாலை பகுதி சந்தை வணிக வளாகம், காந்தி சந்தை பகுதியில் மேம்படுத்தப்பட்ட மீன் மற்றும் இறைச்சி அங்காடி, மலைக்கோட்டைகோயில் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட (லேசா்) நீா்த்திரை ஒலி, ஒளி காட்சி அமைப்பு ஆகிய 6 பணிகள் செயல்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன என்றாா்.

மலைக்கோட்டையில் லேசா் ஒலி, ஒளி காட்சி.

லேசா் நீா்த்திரை ஒலி, ஒளி காட்சி மூலம் ஒளிரும் மின் ஒளி மூலம் தண்ணீரை திரையாக்கி அதில் காட்சிகளைக் காண முடியும். மலைக்கோட்டை தெப்பக்குளத்தில் இதுகுறித்த செயல் திட்டம் கடந்த 2019, 2021 ஆம் ஆண்டும் செயல்படுத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கரோனா உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் மற்றும் ஆட்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் அத்திட்டம் பாதியில் நின்றது. இப்போது அத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் நமது கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பிரதிபலிக்கும் விதமாக ஒலி, ஒளி அமைப்புடன் காட்சிப்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக தினசரி சுமாா் அரை மணி நேரம் ஒளிரும் வகையில் இது செயல்படுத்தப்படும்.

Leave A Reply

Your email address will not be published.