திருச்சியில் நடைபெற்ற காவலர், தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத் தேர்வுவில் 6556 பேர் பங்கேற்பு.
இன்று நடைபெற்ற தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிற இரண்டாம் நிலை காவலர்,சிறைக்காவலர்,தீயணைப்பாளர் பதவிக்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
திருச்சி மாநகரத்தில்
8 மையங்களில் 6556 பேர் எழுதுதினர்.
தேர்வர்கள்
காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்தனர்.
திருச்சி,
ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வினை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி ஆணையர்
நிவேதா லஷ்மி,
ஆய்வாளர் அரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆண்டவன் கல்லூரியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் 498 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
இத்தேர்வானது காலை 10 மணி முதல் 12.40 மணிக்கு நிறைவு பெற்றது.
தேர்வர்கள்,
அவர்களுக்கு அனுப்பப் பட்ட நுழைவுச் சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற கூறப்பட்டது .
தேர்வு மையத்திற்கு எவ்வித மின்னணு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களான எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் கைகடிகாரங்கள், புளுடூத் உபகரணங்கள் செல்போன் ஆகியவற்றை எடுத்து செல்லவும் தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கவும் படவில்லை.
முன்னதாக முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் தேர்வு மையத்திலிருந்து வெளியேற்றப்ப டுவதுடன், தகுந்த சட்ட நடவடிக்கை களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வு பணிகளை கண்காணிக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர் .