Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி அழகு படுத்தும் விதமாக ஆபத்தான தடுப்புகள் பற்றி கலெக்டரிடம் எடுத்துக் கூறிய மக்கள் சக்தி இயக்க பொருளாளர் நீலமேகம்.

0

மாநகராட்சி அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ்
ஆபத்தான வகையில் அமைத்துள்ள தடுப்புகள்…
குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 47 க்கு உள்பட்ட பகுதியில், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதியில், அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கென மாநகராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, பாலத்தின் கீழ் புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத இரும்பு குழாய்கள், தகடுகளால் ஆன அலங்கார தடுப்புகள், வண்ண ஓவியங்கள், அலங்கார மின் விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது. இப்பணிகளில், தடுப்புகளில் பெரிய வாள் போன்ற கூர்மையுடன் கூடிய அலங்கார தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவை பார்ப்பதற்கு அழகுற காணப்பட்டாலும், அவற்றின் நுனிப்பகுதி, மிகவும் கூர்மையான வாள்போன்ற அமைப்புடன் ஆபத்துகளை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்படுள்ளன.

இந்த பகுதியில் இரு சக்கரம் வாகனம் மற்றும் நடந்து செல்லுகிறார்வர்கள், சிறு விபத்து நடந்து இந்த தடுப்பில் விழுந்தால் கூர்மையான கூரிய வாள்போன்ற பகுதியால் கிழிக்கும் அபாயம் உள்ளது.

பாலத்தின் அடியில், பசுமையான பூச்செடிகள், புல்தரையுடன் கூடிய சிறு பூங்கா அமைக்கப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள் அதற்குள் வந்து செல்ல வாய்ப்புகள் உண்டு. எனவே அந்த தடுப்புகளில் கைவைத்தாலோ அல்லது ஏறி இறங்கினாலோ கூர்மையான பகுதியால் கிழிக்கும் அபாயம் உள்ளது.

இதைச் சுட்டிக்காட்டி, ஆபத்து ஏற்படாத வகையில் பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இது போன்று ஆயுதங்கள் போல் உள்ள அலங்கார தடுப்புகள் அமைக்கக் கூடாது. அல்லது அவற்றில் ரப்பர்களால் ஆன பாதுகாப்பு உறைகளாவது பொருத்தப்படுவது அவசியம். என மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், சிலம்பம் கார்த்தி, ஷர்மிளா, அகிலா ஆகியோர் சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.