திருச்சி மகாத்மா கண் மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான 2 நாள் சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை முகாம்.
திருச்சி தென்னூரில் செயல்பட்டு வரும்மகாத்மா காந்தி கண் மருத்துவமனையில் உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று இரண்டு நாட்கள் சக்கரை நோயாளிகளுக்கான சிறப்பு இலவச விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மகாத்மா கண் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் இயக்குனர் டாக்டர் அனுக்ரஹா பிரசன்னா
மற்றம் விழித்திரை துறையை சேர்ந்த மருத்துவர்கள்
டாக்டர் ஷாலினி,
டாக்டர் சாய் தேஜஸ்வி முகாமில் சர்க்கரை நோயாளிகளுக்கு வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்தியேக கண் விழித்திரை பரிசோதிக்கும் கருவி ( Diabetic Retionpathy Detetion Scan) மூலம் சர்க்கரை நோயாளிகளின் கண்களை பரிசோதனை மேற்கொண்டனர்.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை மருத்துவமனை ஊழியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.