திருச்சியில் தனியார் பள்ளியில் பணம் திருடியவர் கைது.
திருச்சி சென்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் அலுவலகம் உள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு ஒரு ஆசாமி காரில் வந்து தாளாளர் அலுவலகத்தில் புகுந்து அங்கு உள்ள அறையில் இருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டான்.
இது குறித்து பள்ளித் தாளாளர் யூஜின் கண்டேன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தாளாளர் அலுவலகத்தில் பணத்தை திருடிய மதுரை ஆணையூரை சேர்ந்த செபாஸ்டின் சூசைராஜ் (வயது 55 ) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.