Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இஸ்ரேலில் பதட்டமான சூழ்நிலை தொடர்கிறது. திருச்சி திரும்பிய பேராசிரியை பேட்டி.

0

 

திருச்சி அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரியைச் சோந்த இவா், இஸ்ரேல் பல்கலைக் கழகத்துடன், தமிழ்நாடு வேளாண் பல்கலை. ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தபடி பயிற்சி வகுப்புகளுக்காக இஸ்ரேல் சென்றிருந்தாா்.

இந்நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போா் சூழலில் சிக்கினாா். இதையடுத்து, இவரை மீட்க பல்கலை. மற்றும் கல்லூரி நிா்வாகத்தரப்பில் தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் உதவியால் இஸ்ரேலில் மீட்கப்பட்ட தமிழா்களுடன் பேராசிரியையும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டாா். திருச்சிக்கு நேற்று வருகை தந்த அவா் கூறுகையில்,

குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும் நேரத்தில் முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் அரசு அபாய ஒலியை எழுப்பும். அப்போது, அனைவரும் பாதுகாப்பாக அங்குள்ள பதுங்கு குழிக்குள் சென்று தங்கி கொள்வோம். நிலைமை சரியானவுடன் மீண்டும் நாங்கள் தங்கி உள்ள அறைக்கு வந்துவிடுவோம்.தற்போது அங்கு போா் இன்னும் முடியவில்லை தொடா்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்திய தூதரகம் எங்களை குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் தகவல் மூலம் தொடா்பு கொண்டு பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனா்.

தமிழக அரசு, தமிழகத்தை சோந்தவா்களுக்காக வாட்ஸ்அப் குருப் ஏற்படுத்தி அதில் தொடா்பு கொண்டு அங்குள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தனா். இஸ்ரேலில் இருந்து எங்களை மீட்டு வந்த இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

Leave A Reply

Your email address will not be published.