Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தேசிய அளவிலான கூடோ போட்டியினை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

0

 

தேசிய அளவிலான கூடோ போட்டியின் மூலம்

வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது

தேசிய பயிற்சியாளர் கந்தமூர்த்தி திருச்சியில் பேட்டி.

5வது மாநில அளவிலான கூடோ‌ போட்டிகள் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள சங்கீதா திருமண மண்டபத்தில் தமிழக கூடோ சங்க தலைவரும் பயிற்சியாளருமான
கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

போட்டிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்து பார்வையிட்டு வீரர் வீராங்கனைகளை வாழ்த்தினார்.

இந்த போட்டிகளில் திருச்சி, ஈரோடு, தஞ்சை, சென்னை, கன்னியாகுமாரி, திருவண்ணாமலை, சேலம், மதுரை, நாகை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 350க்கு மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டிகள் 5,10, 14,16,19,21 மற்றும் 22 வயதிலிருந்து 50வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

போட்டியின் நடுவர்களாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நடுவர்கள்
ஷேக்அப்துல்லா, பிராங்கிளின்பென்னி, சந்திரன், குணசேகரன், சுரேஷ், காவியா, இலக்கியா, ஸ்டாலின், பெரியண்ணன், பிரேம், குமார், மற்றும் பாலாஜி ஆகியோர் செயல்பட்டனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மாநில அளவில் நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவார்கள் நவம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற உள்ள 14 ஆவது தேசிய அளவிலான போட்டிகளிலும், அதனைத் தொடர்ந்து 15வது தேசிய அளவிலான அட்சயகுமார் கோப்பை காண போட்டிகளிலும், தொடர்ந்து 4வது ஃபெடரேஷன் கப் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
மாநில தலைவர் மற்றும்
தேசிய கூடோ பயிற்சியாளருமான
கந்தமூர்த்தி
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளனர். இந்த போட்டியின் மூலம்
வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. அதற்குண்டான படிவம் 2 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசின் வேலைவாய்ப்பு, கல்வித் திட்டங்களிலும் கூடோ போட்டியில் பங்குபெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு
வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.