Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் முழு தர்ணா போராட்டம்.

0

 

முழு தர்ணா போராட்டம்.


ஊதிய உயர்வு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஈ டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் ஊழியர்களுக்கான சலுகைகள், விருப்ப மாறுதல் உடனே வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர், பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும், பணியாளர்களின் இரட்டிப்பு ஊதியம், மருத்துவ செலவினங்கள், வருங்கால வைப்புநிதி முன் கடன், இருசக்கர வாகன கடன், வீடுகட்டும் முன் பணம் ஆகியவற்றிற்கு உரிய காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,1.12.2019க்கு பின் 16.5.2023க்கு முன் மின்வாரிய பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பலன் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் திருச்சி மண்டல அளவிலான முழுநேர தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியஅமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர்கள் திருச்சி மண்டல அகஸ்டின், திருச்சி மாநகர எஸ்.கே.செல்வராஜ், புதுக்கோட்டை நடராஜன், திண்டுக்கல் திருமலைசாமி, பெரம்பலூர் பன்னீர்செல்வம், டிஎன்பிஇடபுள்யுஓ துணைத்தலைவர் தமிழ்நாடு பவர் இன்ஜினீயர்ஸ் ஆர்கனைசேஷன் உதவிப்பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின்வாரிய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு ராஜகுமாரி,சாந்தி, சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம். புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.
முடிவில் வட்ட பொருளாளர் பழனியாண்டி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.