திருச்சி மேல கல்கண்டார் கோட்டையில்
2 குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நேதாஜி தெரு தங்கராஜ் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அனிதா (வயது 35). இவர்களுக்கு லெனின் (வயது 5) , ஜஸ்வின் (வயது 3) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற அனிதா வீடு திரும்பவில்லை. இது குறித்து குமார் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிந்து காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்..