Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான ஒருநாள் ஆற்றுப்படுத்தும் பயிற்சி.

0

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான ஒருநாள் ஆற்றுப்படுத்தும் பயிற்சி நடைபெற்றது .

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். செல்வம் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் ஆலோசனைப் படியும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான ஒருநாள் ஆற்றுப்படுத்தும் பயிற்சி நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல், திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் முனைவர் குணசேகரன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் திருச்சி மாவட்ட கிளை செயலாளர் ஜவஹர் ஹாசன் ஆகியோர் யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கு ஆற்றுப்படுத்தும் பயிற்சியை வழங்கினார்.

இந்த நிகழ்வில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் முதல்வர் முனைவர். வாசுகி மற்றும் கல்லூரியின் புலத் தலைவர் முனைவர் கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த யூத் ரெட் கிராஸ் ஆற்றுப்படுத்தும் பயிற்சியில் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியை சேர்ந்த 260 யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த நிகழ்வை சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர்கள் முனைவர். தனலட்சுமி, முனைவர். மணிமேகலை மற்றும் முனைவர். நித்தியா ஆகியோர் ஏற்பாடு செய்து சிறப்புற ஒருங்கிணைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.