Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர் திருட்டில் ஈடுபட்டு பல கோடி கணக்கில் சம்பாதித்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் திருச்சியில் கைது.

0

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற மண்ணச்சநல்லூர் கோவத்தகுடியைச் சேர்ந்த ரத்தினம்பிள்ளை மனைவி அன்னபூரனி (வயது 75) என்பவர் நேற்று முன்தினம் காலை மண்ணச்சநல்லூரிலிருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றார்.

மேலும் அன்னபூரனி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க சங்கிலி அணிந்திருந்தார். பேருந்து சமயபுரம் சந்தைப் பேட்டை பஸ் ஸ்டாப்பில் நின்ற போது அன்னபூரனி இறங்கி எதார்த்தமாக கழுத்தை பார்த்தபோது தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் சமயபுரம் சந்தை பஸ் ஸ்டாப்பில் இருந்த திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் நேர்முக தொடர்பு எண்ணுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலமாக உடனடியாக சமயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த புகாரின் அடிப்படையில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து. சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரண்டு பெண்களை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் போட்டோவை நவீன அப்ளிகேஷன் மூலமாக சோதனை செய்த போது காளியம்மாளுக்கு மற்றும் ரேகா ஏற்கனவே காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ரேகாவின் அசல் பெயர் கல்பனா(வயது 45) என்றும் மேலும் சுப்புலெட்சுமி அசல் பெயர் காளியம்மாள் (வயது 48) என்பதும் தெரிந்தது. மேற்படி காளியம்மாள் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது அவர்கள் ஒரு இடத்தில் கூட ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக தங்கியதில்லை என்று தெரியவந்ததன் பேரில், அவர்கள் செல்போனில் GPS-யை ஆராய்ந்த போது இவர்கள் போலியான பெயர்களை மாற்றி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கடந்த 15 வருடமாக கோயம்புத்தூர், பழனி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, குன்றத்தூர், சென்னை, பெரியபாளையம், திருவாரூர், சித்தூர், காளகஸ்தி, திருப்பதி, தானே (மகாராஷ்டிரா) மும்பை, ஹாஸ் நகர் (மகாராஷ்டிரா), கிழக்கு கல்யாணம் புனே, குல்பர்கா, செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், கும்பகோணம், பல்லடம், பாந்த்ரா, காஞ்சிபுரம், அனந்தபூர் பெங்களூர், மேட்டுப்பாளையம், வேளாங்கண்ணி, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருட்டு வழக்கில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.

இதன்பிறகு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில் லால்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் மற்றும் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர்கள் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர்.

இதில் இரண்டு பெண்களிடம் இருந்து 58 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரூ. 26 ஆயிரம் ரொக்கம், ரூ. 3 கோடி மதிப்புள்ள பத்திர ஆவணங்கள், இரண்டு செல்போன், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

மேலும் இந்த திருட்டு வழக்கில் உடன் இருந்த இரண்டு ஆண்களிடம் தொடர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட காளியம்மாள் ரேகா மற்றும் 2 ஆண்களை திருச்சி ஜே எம் 3 கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.