Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் சார்பில் இந்தியா. துபாய்.கனடா உலக சாதனை நிகழ்ச்சி.

0

திருச்சி வேர்ல்ட் சிலம்பம் யூத் ஃபெர்டேஷன் சார்பில் திருச்சி தில்லை நகர்
கி.ஆ.பெ.
விசுவநாதன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் காப்போம் என்கிற உறுதிமொழியுடன் இரண்டு சிலம்ப குச்சியை கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை செய்தனர்.
இந்த சாதனை நிகழ்ச்சிகளை தமிழக சிலம்பம் சங்க செயலாளர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேற்பட்ட மாணவ மாணவிகள் இப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

காலை 6.30 மணிக்கு தொடங்கி 9.30 மணி வரை தொடர்ந்து மூன்று மணி நேரம் வரை நடைபெற்றது.

இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு துபாய் ஜன்ஸ்டீன் உலக சாதனை புத்தக நிறுவனர் கார்த்திக் குமார்,மேனேஜிங் டைரக்டர் மோனிகா ரோஷ்னி மற்றும் சுந்தரேசன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

முதல் இடத்தினை ஆறு நவீன் விக்னேஷ் மாஸ்டரும், இரண்டாம் இடத்தை சீர்காழி விமல் மற்றும் கோகுல், மூன்றாம் நிலைத்தினை முத்துமாரி ஆகியோர் பெற்றனர்.

மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் வேலூர் மாவட்ட கபடி வீராங்கனை திவ்யாவிற்கு மேல் படிப்பிற்காக ரூபாய் 1,50,000 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகமாணிக்கம், ரவிச்சந்திரன்,
திருமுருகன், ராஜகோபால்,முத்துமாரி, சற்குணம், கஜராஜன், சதீஷ்குமார்,
கணேசன்,நடராஜன்,ராஜ்குமார், மணிகண்டன்,
அன்பழகன், கண்ணன்,முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

இந்த சாதனையை நிகழ்ச்சியினை உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் ஆர். மோகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.