Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புனித சிலுவை கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு.

0

 

போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி போதை ஒழிப்பு இளையோர் மன்றம் இணைந்து
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியினை
கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் அருள் சகோதரி ராஜகுமாரி தலைமை வகித்தார்.

 


திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முகமது சபி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ராக்போர்ட் நரம்பியல் மைய மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் வேணி, ஆத்மா மனநல மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி போதை ஒழிப்பு இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் எடல் ஜோஸ்பின் ராஜகுமாரி, முனைவர் ரேவதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, மாணவர் மன்ற துணைத்தலைவர் ரோஷினி, முன்னாள் தலைவர் லட்சுமி பிரியா,
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க முடக்குனர் உமர் முக்தர், இயக்குனர்கள் குமார், பாஸ்கரன், இணைச்செயலாளர் சந்துரு, தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சங்க சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், உறுப்பினர் வளர்ச்சி குழு தலைவர் கார்த்தி, சீனிவாசன் உள்ளிட்டோருடன் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி போதை எதிர்ப்பு இளையோர் மன்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள்,
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப் பொருட்களின்
உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என உறுதியேற்றனர்
உறுதியேற்றனர். முன்னதாக போதை எதிர்ப்பு இளையோர் மன்ற தலைவர் பிருந்தா லட்சுமி வரவேற்க நிறைவாக செயலர் பெனட் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.