Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வார விடுமுறையையொட்டி கும்பகோணம் கோட்டம் சார்பில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

0

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் 4 நாட்களுக்க 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் இரா. மோகன் தெரிவித்திருப்பது:

வருகிற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சாா்பில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும்,

சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு 200 பேருந்துகளும்,

திருச்சியிலிருந்து கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 100 பேருந்துகளும் என மொத்தம் 300 சிறப்பு பேருந்துகள் நாளை வெள்ளிக்கிழமையும் (ஜூலை 7), சனிக்கிழமையும் இயக்கப்படவுள்ளன.

இதேபோல, விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவா் ஊா்களுக்கு திரும்பி செல்ல ஜூலை 9, 10 ஆம் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 200 சிறப்பு பேருந்துகளும், பிற தடங்களில் 100 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலா்கள், பரிசோதகா்கள், பணியாளா்கள், பயணிகள் வசதிக்காக பணியமா்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேருந்து வசதியை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.