Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவெறும்பூர் எம்ஜிஆர் சிலை திறப்பு விழா:தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள மாவட்ட செயலாளர் குமார்.

0

பெல் (BHEL) எனும் பாரத மிகுமின் நிலையம் திருச்சி திருவெறும்பூர் அருகே இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கம் இயங்கி வந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக, பெல் அண்ணா தொழிற்சங்கம் இயங்கி வருகிறது.

இந்த சங்கத்தில் 1800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து பெல் அண்ணா தொழிற்சங்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பெல் நிறுவன வளாகத்தில், பெல் அனுமதியுடன் சுமார் 4000 சதுர அடியில் புதிதாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட உள்ளது.இதற்காக கடந்த மாதம் 28-ம் தேதி காலை கால்கோள் நடப்பட்டது

அதனைத் தொடர்ந்து தினமும் விழா மேடை மற்றும் தொண்டர்கள் அமரும் இடங்கள் என விழா நடைபெறும் இடத்தில் நேரில் சென்று நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகிறார், தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்.

56 கிலோ எடையுள்ள ஏழு அடி உயரம் கொண்ட இந்த முழு உருவ வெண்கல சிலை 12 அடி உயரமுள்ள பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பத்து லட்சம் மதிப்பீட்டில், திருச்சி பெல் (BHEL) நிறுவன வளாகத்தில், மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களின் சிலையை அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நாளை மாலை 6 மணி அளவில் திறந்து வைக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

 

இன்று நடைபெறும் பணிகளை தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பார்வையிட்டார் உடன் மாநகர் மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்,
கவுன்சிலர் அம்பிகாபதி, பெல் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக், எம்.கே.குமார்,
பேராசிரியர் பாபு,இன்ஜினியர் ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.