திருச்சியில் இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம்.
திருச்சி சுப்ரமணியபுரம் கோவில் தெருவில் உள்ள எட்வின் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது 35).
இந்த தம்பதியருக்கு ஆண்ட்ரூஸ் (வயது 12) லாரன்ஸ் (8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கணவரிடம் கோபித்துக் கொண்டு அனிதா தனது இரண்டு மகன்கள் உடன் அதே பகுதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அப்போது வீட்டில் இருந்த அனிதாவின் தந்தை ராஜன் தனது இன்னொரு பேரனை பள்ளியில் கொண்டு போய் விடுவதற்காக சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது அனிதா மற்றும் குழந்தைகளை காணாமல் திடுக்கிட்டார். அங்கிருந்து அவர்கள் மாயமாகி இருந்தனர். இதுகுறித்து அனிதாவின் தந்தை ராஜன் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.