Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:வரும் 24ம் தேதி அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் அமைப்பின் சார்பில் 2ம் ஆண்டு தேர் திருவிழா.

0

 

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் ( ISKCON ) அமைப்பின் சார்பில் இரண்டாம் ஆண்டு தேர் திருவிழா. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு ஸ்ரீ ஜெகந்நாத் ரத யாத்திரை எனும் தேர் திருவிழா திருச்சியில் வரும் சனிக்கிழமை 24 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து தொடங்குகிறது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி ஸ்ரீரங்கம் இஸ்கான் அமைப்பின் பொது மேலாளர் நந்த புத்ர தாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது ரத யாத்திரை எனும் தேர் திருவிழா தொன்று தொட்டு ஒரிசாவில் ஜெகந்நாத் புரியிலும் மற்றும் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெறுகிறது. திருச்சி மையங்கள் சார்பில் திருச்சி மாநகரில் இரண்டாம் ஆண்டாக உலக அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தினை மேம்படுத்தும் வகையில் இவ்விழா நடைபெறுகிறது. நவீன தொழில்நுட்பமும் பண்டைய பாரம்பரியமும் கொண்ட இந்த நவீன தேரில் ஏர் பிரேக்குகள், சஸ்பென்ஷன், 12 அடி முதல் 18 அடி வரை ரதத்தின் விமானம் மேல் நோக்கி இருக்கும் வகையில் அமையப்பெற்ற தேரில் வடம் பிடிக்க ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக பங்கேற்று சுமார் 300 பேர் தேரினை இழுக்கும் வகையில் உறுதியான 65 அடி நீள கயிறுடன் உள்ளது.
சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ரத யாத்திரை கலைஞர் அறிவாலயம் பகுதியில் இருந்து தொடங்கி சத்திரம் பேருந்து நிலையம்,மாரிஸ் தியேட்டர் பாலம் கரூர் புறவழி சாலை வழியாக மீண்டும் கலைஞர் அறிவாலயத்தில் முடிவடைகிறது.ரதயாத்திரை செல்லும் வழியில் பொதுமக்களுக்கு சுவையான பிரசாதம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இஸ்கான் ஸ்ரீரங்கம் மையத்தின் பிரதான மூர்த்திகளான ஸ்ரீ ஸ்ரீ ஜெகந்நாதர்,
பல தேவர்,சுபத்ரா தேவியின் மூர்த்திகள் ரத்தத்தில் எழுந்தருளி வலம் வந்து திருச்சி மக்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.மேலும் 6 மணி அளவில் கலைஞர் அறிவாலயத்தில் பிரத்தியோக பக்தி நாடகம் திரையிடப்படும்.

முடிவில் மகா பிரசாதம் விநியோகிக்கப்படும். பொதுமக்கள் ரத பக்தி திருவிழாவில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம் என்று தெரிவித்தார். மேலும் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீரங்கம் இஸ்கான் வளாகத்தில் மங்கள ஆரத்தி ,குருபூஜை, ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு, சாதனை விருதுகள், யோகா ஆரத்தி கீர்த்தன மேலா ஆகியவை நடைபெறும் என்று தெரிவித்தனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது நிர்வாகிகள் பத்ரிநாத் தாஸ், விக்ரம் தாஸ், நித்தியானந்தா தாஸ், ஸ்ரீராம் பிரபுதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.