Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:ரயில்வே மைதானத்தில் பயிற்சி பெற்று வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா.

0

 

திருச்சி ஜங்ஷன் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடை விடுமுறையில் பள்ளி,கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு தடகளம், நீளம் தாண்டுதல், டெக்வொண்டோ, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

சிறப்பாக பயற்சி பெற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தின் பொறுப்பாளராக கடந்த 8 ஆண்டுகளாக உள்ள தேசிய தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு வீரரும் ரயில்வே துறையில் அலுவலக கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தமிழரசன் முயற்ச்சியால் பல்வேறு விதமான விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தடகள மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பயிச்சிகளை இலவசமாக பல்வேறு மாணவ மாணவிகளுக்கு அளித்து வரும் தடகள விளையாட்டு பயிற்ச்சியாளரும் அஞ்சல் துறையில் பணியாற்றி வருபவருமான முணியான்டி பயிற்ச்சியில் பல்வேறு விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பல பாதகங்களை மாநில அளவிலும் தேசிய அளவிலும் பெற்று அரசு துறையில், காவல்துறையில். மத்திய அரசு பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு பயிற்சியாளர் முனியாண்டி தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிக்கான பயிற்சி அளித்து வருகிறார் இவருக்கு உறுதுணையாக தடகள பயிற்சியாளர் சுரேஷ் பாபு அவர்களும் பயிற்சி அளித்து வருகிறார்.

இந்த 2023 ஆண்டு மே மாதம் பள்ளி கோடை விடுமுறை காலத்தில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை பள்ளி மாணவ மாணவிகள் பெற்றனர் பயற்சி முடிந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அரசு சுகாதார இயக்குனர் சுப்பிரமணியன், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகளான அமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் செந்தில் குமார், மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலர் அல்லி கொடி, நிர்வாகி வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், விளையாட்டு பிரிவு இணைச் செயலாளரும் தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரருமான எழில் மணி, தேசிய தடகள விளையாட்டு வீரர் ஷேக் மோய்தீன் டேக்வாண்டோ தேசிய பயிற்ச்சியாளரும் விளையாட்டு வீரருமான மேத்யூ மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்

மேலும் இவ்விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகளை மாணவ மாணவிகள் விளையாட்டு வீரர்கள் மேற்கொள்வதர்க்கு பல வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மற்றும் பல்வேறு விதமான ஆலோசனைகளையும் ஊழியர்கள் மற்றும் விளையாட்டு மைதான நிர்வாகிகளுக்கு திருச்சி கோட்டத்தின் சதர்ன் ரயில்வே ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் செயலாளர் ஹரி குமார் ஜ.ஆர்.டி.எஸ். சீனியர் டிஓஎம் வழங்கினார். இவர் பதவிக்கு வந்த பின் பல்வேறு முயற்சிகளை எடுத்து மைதானத்தில் பல்வேறு வசதிகளை கொண்டு வந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.