சத்திரம் பேருந்து நிலையம் அருகே மசாஜ் சென்டரில் விபசாரம்: இளம் பெண் மீட்பு.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு இளம்பெண்ணை வைத்து அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார், விபசார தொழிலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த இளம் பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார் இதுதொடர்பாக சூர்யா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.