கல்லூரி மாணவி மாயம்.
திருச்சி பெரியமிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் என்பவரின் மகள் பவித்ரா (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார்.. இந்தநிலையில் சம்பவத்தன்று சேலத்தில் நடைபெறும் தனது தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறிச்சென்ற பவித்ரா பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவருடைய தாயார் இந்திரா இதுபற்றி செசன்சு கோர்ட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து செசன்ஸ் கோர்ட் போலீசார் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.