Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தோனியின் பெருந்தன்மை. குவிந்து வரும் பாராட்டு.

0

 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வுபெற்றாலும், அவருக்கு இருக்கும் மரியாதை நாளுக்குநாள் கூடி வருவதோடு, நாட்கள் செல்லச் செல்ல சிறந்த மனிதருக்கான அடையாளத்தை அவர் உயர்த்திக்கொண்டே வருகிறார்.

சமீபத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டியானது குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
மே 28ம் தேதி சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் நடக்கவிருந்த இறுதிப்போட்டியானது மழையின் காரணமாக ரிசர்வ் டே அன்று மாற்றப்பட்டது.

அதன்படி மறுநாள் இறுதிப்போட்டி நடைபெற்றது. அப்போதுகூட போட்டியின் முதல் செஷன் முடிந்ததும் அடுத்து சென்னை அணி பேட்டிங்கை துவக்கியபோது மீண்டும் மழைகுறுக்கிட்டது. சோகத்தில் ரசிகர்கள் ஒருபுறமிருக்க, ஆட்டம் நடக்குமோ நடக்காதோ என்ற எதிர்பார்ப்பு மட்டுமே மிஞ்சியது.

அப்போது ஆடுகளப் பராமரிப்பாளரும் பணியாளர்களும் தான் போட்டியை நடத்த உறுதுணையாக இருந்தார்கள்.

பின்னர் போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று சென்னை அணியின் வெற்றியும் பெற்றது. இதையடுத்து, அனைவரும் கொண்டாடவே, போட்டி நடக்க உறுதுணையாக இருந்த ஆடுகள பராமரிப்பாளர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து, ஆடுகள பராமரிப்பாளர்கள் தோனியை பார்த்து பேச அவரை நோக்கி வந்தனர். அப்போது அருகே நின்று கொண்டிருந்த பாதுகாவலர்களும் அவர்களை தோனி அருகே வரவிடாமல் தடுத்தார். அப்போது, தோனி அவர்களைக் கண்டித்தபடி, ஆடுகளப் பராமரிப்பாளர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் சேர்ந்து குரூப்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதில் ஒருவர் தோனியை தங்களில் ஒருவராக நினைத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து அவர் மீது தோள்களில் கைகளைப் போட்டார். அதற்கும் எந்தவொரு தடையும் சொல்லாமல் அவர்களின் அன்பில் திளைத்தார்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் போட்டி நடக்கக் காரணமாக இருந்த பராமரிப்பாளர்களை அனைவரும் மறக்க, தோனி மட்டும் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்து அவர்களுக்கான மரியாதை கொடுத்தது, அனைவரின் பாராட்டினையும் பெற்று வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.