திருச்சி கருமண்டபம் ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோயில் 74 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம்.
திருச்சி கருமண்டபம் அருள்மிகு ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோயில் 32 ஆம் ஆண்டு பூச்செடிகள் விழா மற்றும் 74 ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவை முன்னிட்டு
முதல் முதல் நாள் 21ம் ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை திருச்சி கருமண்டபம் கோரை ஆற்றில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம்,அக்னி சட்டி,அழகு குத்தி பூக்குழி இறங்கினர்.
பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகள் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக கோயிலில் வெட்டப்பட்டது.
வரும் ஜூன் 1ஆம் தேதி இரவு 8 மணி அளவில் விடையாற்றி விழா நடைபெற உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.
இந்த திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ இளங்காட்டு மாரியம்மன் கோயில் அறக்கட்டளையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.