Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமமுக கூடாரம் அல்ல காலியாக, யாராலும் அழிக்க முடியாத கோட்டை.திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேச்சு.

0

 

திருச்சி மாநகரில் டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்.

திருச்சி மாநகர், மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர், மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் இன்று திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநகர மாவட்ட அவைத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கட்சியின் துணை பொது செயலாளர் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ரெங்கசாமி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், முன்னாள் மேயரும் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

 

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிலர் கட்சியிலிருந்து விலகும் போது கூடாரம் காலியாகி விட்டது என்று சொன்னார்கள். அது உண்மை அல்ல. இங்கு இருப்பது கோட்டை. இதனை யாராலும் உடைக்க முடியாது. தைரியமான ஒரெ தலைவர் டி.டி.வி. தினகரன் இவர் பல புதிய இளைஞர்களையும், தலைவர்களையும் உருவாக்கியுள்ளார்.

திருச்சி மாநகர அ.ம.மு.க வில் ஆளுமை மிக்க தலைவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மத்தியில் ஒரு சாதாரன குடும்பத்தில் இருந்து வந்த என்னை மாவட்ட செயலாளராக ஆக்கி உள்ளார். அந்த பெறுமை டி.டி.வி. தினகரனையே சேரும். வருகின்ற காலத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கரத்தை திருச்சியில் வலுப்படுத்த பாடுபடுவோம், கள்ளச்சாரய விற்பனை அம்மா ஆட்சியில் நடைபெற்றது இல்லை, கள்ளச்சாரய விற்பனை இந்த ஆட்சி ஒழிக்க தவறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை, இளைஞர் பாசறை செயலாளர் மணிகண்டன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ் பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்கள். இந்த மாநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.