கள்ளச்சாராய விற்பனையை கண்டித்தும், அதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.
பாரதிய ஜனதா மகளிர் அணியினர் சார்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் அணி மாவட்ட தலைவர் ரேகா தலைமையில் நடைபெற்றது.
மகளிர் மாநில துணைத் தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன்,
புற நகர் மாவட்ட பார்வையாளர் மணக்கால் லோகிதாசன், பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், திருச்சி மாநகர் மாவட்ட பொதுசெயலாளர்கள் காளீஸ்வரன், பொன். தண்டபாணி, ஒண்டி முத்து, மாநில இளைஞர் அணி பொதுசெயலாளர் கௌதம், மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் சி. இந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மரியா வின்சென்ட்,மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, சர்வேஸ்வரன். நாகேந்திரன்,மணிமொழி, ஜெயந்தி, சங்கீதா, மணிமேகலை, வேளாங்கண்ணி, அணி நிர்வாகிகள் அழகேசன், யசோதன், புருஷோத்தமன் மற்றும் திருச்சி மாநகர், புறநகர் மகளிர் அணி நிர்வாகிகள், கட்சியின் மண்டல தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.